டெங்கு காய்ச்சலுக்கு குணம்தரும் நிலவேம்பு குடிநீர் செய்வது எப்படி...?

டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு தடுப்பு மருந்தாகவும், அதற்கான சிகிச்சைகளுக்காகவும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. டெங்கு  காய்ச்சலால் குறையும் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பப்பாளி இலைச்சாறு, ஆடா தொடை, மணப்பாகு வழங்கப்படுகிறது. இந்த மருந்துகளை தமிழக அரசே பரிந்துரைத்து வருகிறது.
நிலவேம்பு குடிநீர் பாரம்பரிய மற்றும் பாதுகாப்பான மருந்து. டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களுக்கு நிலவேம்பு குடிநீர் பயன்படுத்தலாம்  என தமிழக அரசும் கூறிவருகிறது.
 
நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசுக்கு எதிராக செயல் புரிகிறது. நிலவேம்பு குடிநீரால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் குறித்து பீதி அடைய தேவையில்லை. சித்த மருத்துவர்களின் பரிந்துரையை பெற்று நிலவேம்பு குடிநீரை பருகலாம்.
 
நிலவேம்பு குடிநீர் சூரணத்தை கொண்டு கசாயம் தயாரித்து மட்டுமே குடிக்க வேண்டும். பொடியாக உட்கொள்ள கூடாது. கசாயம் தயாரித்த 3  மணி நேரத்தில் குடிக்க வேண்டும். அதன் பிறகு அதை குடிக்கக் கூடாது. புதிதாக தயாரித்து குடிக்க வேண்டும்.
 
டெங்கு காய்ச்சல் வந்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண காய்ச்சல் வந்தவர்களும் நிலவேம்புக் கஷாயம் அருந்தலாம். சித்த  வைத்திய மருந்துக்  கடைகளில் நிலவேம்பு கிடைக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ரத்த தட்டு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்  செய்கிறது.


 
இரண்டு டம்ளர் தண்ணீருடன், இரண்டு டீஸ்பூன் நிலவேம்பு பொடியை தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் நிலவேம்பு பொடியை அதில் கலக்க  வேண்டும். இந்த கலவையானது அரை டம்ளர் அளவு வரும் வரை நன்றாக சுண்டவிடவும். பிறகு வடிக்கட்டி எடுத்தால் நிலவேம்பு குடிநீர்  தயார்.
 
ஒரு நாளில் இரண்டு வேளை உணவிற்கு முன்பு, குழந்தைகளுக்கு 30 மிலி அளவும், பெரியவர்களுக்கு 60 மிலி அளவும் குடிக்கவேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரையின் படி நாள்தோறும் குடிக்கவேண்டும் காய்ச்சல் அல்லாதவர்கள் மாதத்தில் ஒரு நாள் அல்லது  இரண்டு நாள் குடித்தால் உங்களை காய்ச்சல் அவ்வளவு சீக்கிரத்தில் வராது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்