மலச்சிக்கலைப் போக்கும், ஜீரணசக்தியைக்கூட்டும், பேதியைக் கட்டுப்படுத்தும். பித்தத்தைக்கட்டுப்படுத்தி வாந்தி யைத்தடுத்து வயிற்றில் ஏற்படும் வயிற்று இரச்சலை தடுக்கும்
கறிவேப்பிலை ஈர்க்கு, இலை பட்டை வேர் இவைகளை கஷாயம் வைத்து சாப்பிட்டால் பித்தம், வாந்தி முதலியவை நீங்கும். குடல் வாயுவுக்கு கைகண்ட மருந்து. இலையை அரைத்து காலை மாலை கொட்டப்பாக்கு அளவு முன்று நாளுக்கு சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். உள்சூடு குறையும்.
கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சது, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்களால் கண் பார்வைக் கோளாறுகள், சோகை நோய்கள் குணமடைகின்றன.
மலச்சிக்கலைப் போக்குதல், ஜீரண சக்தியை அதிகரித்தல், பேதியைக் கட்டுப்படுத்துதல், பித்தத்தை மாற்றி வாந்தியைத் தடுத்து வயிற்று இரைச்சலைப் போக்குதல் போன்ற குணநலன்கள் கறிவேப்பிலைக்கு உண்டு.