உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் டிராகன் பழம் !!
செவ்வாய், 22 மார்ச் 2022 (10:56 IST)
டிராகன் பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நல்ல அளவில் உள்ளன. சிறிய அளவில், இதில் கால்சியம், இரும்பு மற்றும் தாமிரம் உள்ளது.
டிராகன் பழம் உடம்புக்கு நல்ல குளிர்ச்சியை தரக் கூடியது. இப்பழத்தில் ஆன்டி ஆக்சிடன்டுகள் இருப்பதால், புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. டிராகன் பழம் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை நன்றாகச் செயல்பட வைக்கிறது.
வைட்டமின் பி 3 இருப்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து, பருமன் இல்லாத சீரான உடலமைப்பை உருவாக்குகிறது. டிராகன் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகளை வலிமைப்படுத்துகிறது, பார்வைத் திறனையும், பற்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
டிராகன் பழத்தில் இரும்புச் சத்து, மெக்னீசியம் நிறைவாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க டிராகன் பழம் உதவுகிறது.
டிராகன் பழம் நார்ச்சத்து நிறைந்த பழம். மலச்சிக்கல் பிரச்னை, செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு டிராகன் பழம் கைக்கொடுக்கும். இதயத்திற்கும் சிறந்த ஆற்றலை அளிக்கிறது.
டிராகன் பழத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
டிராகன் பழத்தில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். இந்தப் பழத்தை அப்படியே சாப்பிட முடியாதவர்கள். சாலட்டாக செய்து சாப்பிடலாம்.