வெப்பம் நிறைந்த கோடைக்காலம் மிக வேகமாக நம் உடல் நீரை வற்றச்செய்து அடிக்கடி தண்ணீர் தாகம் வாட்டும். இதற்கு புதிய வெள்ளரியை நறுக்கி சில துண்டுகளை மென்று கொண்டிருந்தால், போதும். இது நம்மை நீரேற்றத்துடன் வைத்திருப்பதோடு, எடை குறைப்பதற்கான உணவாகவும் இருக்கிறது.
வெள்ளரி உட்கொள்வதால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும், இது நம் பசியை கட்டுப்படுத்துகிறது. இதில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால், எடையைக் குறைக்க உதவுகிறது.