கொத்தமல்லி தழைகள், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் கொழுப்பை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும்.
கொத்தமல்லி இலையில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.
கொத்தமல்லி இலைகள் பருக்கள், பிளாக்ஹெட்ஸ் மற்றும் வறண்ட சருமத்தின் பிரச்சினையில் பயனளிக்கும். கொத்தமல்லி இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி வெறும் வயிற்றில் குடிப்பது சிறுநீர் வழியாக கல்லை அகற்ற உதவும்.