கொண்டைக் கடலையில் நார்சத்து நிறைந்துள்ளதால் தினமும் இரவில் படுக்கும் போது கொண்டைக்கடலையை ஊற வைத்து, மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால், செரிமான பிரச்சனைகள் நீங்கும்.
கொண்டைக் கடலையில் ஃபோலேட் மற்றும் மக்னீசியம் வளமான அளவில் உள்ளதால், இரத்த நாளங்களில் கொழுப்புகள் படிந்து அடைப்பு ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.