படர்தாமரை வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

வெள்ளி, 21 ஜனவரி 2022 (09:40 IST)
நோய் தொற்று ஏற்பட பல காரணங்கள் இருக்கிறது. அதாவது அதிக உஷ்ணம் மற்றும் அதிக ஈரப்பதம் சருமத்தின் இந்த தோல் நோய் உருவாகிறது.


உடல் சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கு உடல் எடை அதிக உள்ளவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் மக்கள் அதிகம் வசிக்கும் இருக்கும் இடத்தில் இருப்பவர்கள் உடல் வேர்வை அதிகம் வரும் அவர்கள் என பல காரணங்கள் இதற்கு இருக்கிறது.

மிளகு மற்றும் நெய் இரண்டையும் சேர்த்து அரைத்து இரவு படுப்பதற்கு முன் படர் தாமரை இருக்கும் இடத்தில் அதை பூசி வைக்க வேண்டும் காலை எழுந்தவுடன் அதனை சீக்காய் பொடியைக் கொண்டு அதனை கழுவி விட வேண்டும்.

அருகம்புல் மற்றும் மஞ்சள் இரண்டையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதை நன்கு அரைத்து படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால் படர்தாமரை மறையும்.

பூவரசங் காய்யை உடைத்தால் அதில் மஞ்சள் நிறம் ஒரு திரவம் வெளியாகும் அதனை படர்தாமரை, தேமல் மீது தடவினால் தேமல் மற்றும் படர்தாமரை குணமாகும்.

எலுமிச்சை பழம் சாறு அதனுடன் சந்தன கட்டையை எடுத்து தேய்த்து பசையாக செய்துகொண்டு படர்தாமரை உள்ள இடத்தில் பூசி வந்தால் படர்தாமரை குணமாகும்.

இரண்டு பங்கு தேங்காய் எண்ணெய் விட்டு அதில் ஒரு பங்கு குப்பைமேனி மற்றும் கீழாநெல்லி இலை பசை சேர்க்கவும். சிறு தீயில் வைத்து தைல பதத்தில் காய்ச்சவும் ஆறவைத்து இதை படர்தாமரை உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். குப்பைமேனி நுண்கிருமிகளை அழிக்கின்றது.

கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கு மட்டுமின்றி தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்தாக அமைகிறது கீழாநெல்லியை அரைத்து அதனை பற்றுப் போட்டால் படர்தாமரை குணமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்