கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்க கூடிய நீர் தான் பித்த நீர். இந்த பித்தநீர் கல்லீரலில் சுரக்கப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. இது உணவு செரிமானத்திற்கு உதவுகின்றது. இந்த பித்தம் உடலில் சரியாக இருந்தால் தான் நன்றாக பசி எடுக்கும், உணவு நன்றாக செரிமானம் ஆகும்.
அதிக புளிப்பு தன்மை உள்ள உணவுகள், அதிக நொறுக்கு தீனிகள், காரத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்பதாலும் உடலில் பித்தம் அதிகமாக சுரக்கும்.
சுக்கு பவுடர் 50 கிராம், சீரக பவுடர் 50 கிராம், நெல்லிக்காய் பவுடர் 50 கிராம் இவை மூன்றையும் கலந்து, காலை மற்றும் மாலை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் கலந்து உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இவ்வாறு சிறிது காலம் செய்து வந்தால் பித்தம் விரைவில் குறையும்.