விளக்கெண்ணெய் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. விளக்கெண்ணெய், ஆமணக்கு விதைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு தாவர எண்ணெய் ஆகும். மற்ற எண்ணெய்களைவிட அடர்த்தி அதிகமாகக் காணப்படுவதால், சற்று பிசுபிசுப்புத் தன்மையுடன் காணப்படும். விளக்கெண்ணெய் குளிர்ச்சியூட்டக்கூடியது.
தொப்புளில் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது விளக்கெண்ணெயைப் பயன்படுத்துவதால் மலச்சிக்கல் தீரும், வயிறு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும், வாய்வுத்தொல்லை நீங்கும், வயிற்றுப் புண் நீங்கும், வயிற்றில் உள்ள கசடுகள் நீங்கும், வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும், உடலுக்கு குளிர்ச்சி தரும்.
விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சிக் கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.