தற்போது குழந்தைகள் அதிகமாகவே செல்ஃபோன்களுக்கு அடிமையாகி வருகின்றனர். பெற்றோர்கள், குழந்தைகள் நம்மை தொந்தரவு செய்ய கூடாது என குழந்தைகளின் கையில் செல்ஃபோனை கொடுத்து எதாவது கார்ட்டுன் வீடியோவை பார்க்க வைக்கின்றனர். மேலும் குழந்தைக்கு சோறூட்டுவதற்கு கூட தற்போது செல்ஃபோன் தேவைப்படுகிறது.
அதிகமாக செல்ஃபோனில் வீடியோ பார்க்கும் குழந்தைகள், வளரும்போது காலப்போக்கில் தண்டுவடம் பாதிக்கப்படும். இதனை ஆரம்பத்திலேயே தடுக்காமல் போனால், குழந்தைகளின் எதிர்காலம் பெரிதும் பாதிப்புள்ளாகும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.