பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை கைகளையும் உடலையும் நீட்டி, மடக்கிக் கொஞ்சம் உடற்பயிற்சி செய்யலாம். கனினியில் தட்டச்சு செய்யும்போது உடலை நேர்க்கோட்டில் வைத்திருப்பது அவசியம். அப்போது முதுகுத்தண்டு நேராக இருக்கும். இப்படிச் செய்வதால் உடல் வலியைக் குறைக்கலாம்.
சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்படும். ஒரே இடத்தில் உட்காருவதால் ஜீரண சக்தி குறைந்து அஜீரணக் தண்மை எற்படும். அதிக நேரம் கணினியை உற்று நோக்கும் போது கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல் ஆகிய பிரச்னைகளும் ஏற்படும். இதற்கு 1 மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை கண்களால் மூடி ஓய்வு கொடுக்கலாம், மற்றும் அடிக்கடி கண்களை சிமிட்டலாம்.