ஏலக்காயில் உள்ள அதிக அளவு ஆண்டி ஆக்சிடண்ட்ஸ், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய கோளாறுகள் ஏற்படாமல் காக்கும். குறிப்பாக இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்து, எந்த வித பிரச்சனைகளும் ஏற்படாமல் காக்கும்.
ஏலக்காய் நீரானது உடலின் மெட்டபாலிசத்தை நன்றாக நடைபெற செய்யும், உடலுக்குள் செல்லும் நீர்ச்சத்துடன் இந்த ஏலக்காயின் தன்மையும் சேர்ந்தே செல்லும். எனவே சோர்வாக இருக்கும் செல்களை இது உற்சாகப்படுத்தி சுறுசுறுப்பாக்கும்.
தொடர்ந்து 14 நாட்கள் இந்த நீரை குடித்து வந்தால், சுமார் ஒரு கிலோ முதல் 2 கிலோ எடை குறையும். அத்துடன் உடல் வலிமையும் அதிகரிக்கும். உடல் பருமனால் உடலில் ஏற்பட்டுள்ள சோர்வு, அலுப்பு போன்றவை முற்றிலுமாக நீங்கி விடும்.