சரும பராமரிப்பில் முல்தானிமட்டியின் முக்கிய பங்கு என்ன...?

முல்தானிமட்டி உலர்ந்த செல்களை நீக்கவும், எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்கை உறிஞ்சி எடுக்கவும் முல்தானி மட்டி முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் துத்தநாகம், சருமத்தில் பருக்களால் ஏற்படும் காயங்களை ஆற்றும் திறன் கொண்டது.

முல்தானிமட்டியை சுத்தமான பன்னீரில் குழைத்து, முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து, தண்ணீரால் கழுவவேண்டும். பரு பிரச்சனை உள்ளவர்கள், அதிகமான எண்ணெய் சுரப்பு உள்ளவர்களுக்கு மிக நல்லது.
 
முகப்பரு உள்ளவர்கள், அதிக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், முல்தானி மட்டியுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்பேக் போடலாம். மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.
 
15 நிமிடங்களுக்கு மேல் அந்த பேக்கை வைத்திருக்கக் கூடாது. வெளியே செல்லும் முன், முல்தானிமட்டி போட்டு முகத்தைச் சுத்தப்படுத்தினால், முகம் பளீரென  இருக்கும்.
 
வெயில்காலத்தில் முல்தானி மட்டி பயன்படுத்தும்போது, சிலருக்கு முகத்தில் எரிச்சல் ஏற்படலாம். அவர்கள் முல்தானி மட்டியுடன் தூய்மையான சந்தனத்தூளைக் கலந்து பூசலாம். எரிச்சல் குறைந்து, குளுமையாக இருக்கும்.
 
புதினா, வேப்ப இலைகளின் விழுது இவற்றுடன் 2 டீஸ்பூன் முல்தானிமட்டியைக் கலந்து, முகப் பருவின் மீது போட்டு வந்தால், பருக்கள் விரைவில் மறையும். வேம்பு, மிகச் சிறந்த கிருமிநாசினி. புதினா, பருவைக் காயச் செய்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்