தினமும் உணவில் பீன்ஸ் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். பீன்ஸ் சாப்பிடுவதால், அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.
பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. பீன்ஸில் உள்ள இசோபிளவோன்ஸ் எனப்படும் உயிர்சத்து உடலுக்கு வலுவாக்கும் தன்மை கொண்டது. பீன்ஸ் மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க பீன்ஸ் பெரிதும் உதவுகிறது. ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் உடலில் மெதுவாக கரைவதன் காரணமாக, இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுக்கும்.