தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகுமா..?

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு  நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதாம் பருப்பை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான முந்தைய நிலையில் இருக்கும் கெட்ட  கொழுப்பின் அளவும் குறைவதாக தெரியவந்துள்ளது.
 
ஆய்வில் பாதாம் பருப்பை சாப்பிட்டவர்களிடம் இன்சுலின் சுரப்பில் வியக்கத்தகு முன்னேற்றம் இருந்ததோடு, கெட்ட கொழுப்பின் அளவும் குறைந்தது தெரியவந்தது.  பாதாமில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது. இவை உங்களுடைய இன்ஸுலின் சுரப்பினை  கட்டுப்படுத்தும்.
சர்க்கரை நோய் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பாதாம் ஓர் அருமருந்தாகும். ப்ரீ டயப்பாட்டீஸ் இருப்பவர்கள் பாதாம்  கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இது இன்ஸுலின் சுரப்பை கட்டுப்படுத்தி சர்க்கரை அளவினை இன்னும் அதிகப்படுத்தாமல் வைத்திருக்கும்.
 
பாதாம் மட்டுமல்லாது இதர கொட்டை பருப்புகளும் கூட டைப் 2 நீரிழிவு நோயை குணப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் பாதாம்  மற்றும் இதர கொட்டை பருப்புகள் உடல் பருமனை எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்காற்றுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்