ப்ளாக் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா...?

ப்ளாக் டீ குடிப்பவர்கள் ஆரோக்கியசாலிகள் என்று சொல்லலாம். மற்ற டீயுடன் ப்ளாக் டீ ஒப்பிடுகையில் இது வேகமாக ஆக்ஸிஜனேற்றப்படுவதால், இது அடர் நிறத்திலும், நல்ல ப்ளேவரையும் கொண்டுள்ளது. 
 
ப்ளாக்
டீயில் காப்ஃபைன், கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கனிமச்சத்துக்கள், ப்ளூரைடு, மாங்கனீசு மற்றும் பாலிஃபீனால்கள் போன்றவை உள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான டானின், குவானைன், ஜாந்தைன், ப்யூரின், கேட்டசின்கள் போன்றவை வளமாக  நிறைந்துள்ளது. 
 
நன்மைகள்:
 
ப்ளாக் டீயில் உள்ள டானின் என்ற வேதிப்பொருட்கள் நோய்கள் உருவாக காரணமான பலவிதமான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை நம் உடலில் அண்டவிடாமல் தடுப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
 
ப்ளாக் டீ யில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் உடலின் எனர்ஜி அதிகரிப்பதுடன், ஸ்டாமினா அதிகரிக்கும். மேலும் அது உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
 
இதயத்திற்குள் இரத்த ஓட்டம் சீராக இருத்தல், கொழுப்புப் பொருட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுத்தல், பல இதய நோய்களைத் தவிர்த்தல், இதயத்தில் உள்ள தசைகளை ஆரோக்கியமாக வைத்திருத்தல் உள்ளிட்ட பல நன்மைகளுக்கு 'ப்ளாக் டீ' உதவுகிறது.
 
ப்ளாக் டீயிலுள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடுகிறது. ப்ளாக் டீ'யில் உள்ள TF-2 என்ற பொருள் புற்றுநோய்  செல்களை அழிப்பதுடன், பிற சாதாரண செல்கள் தாக்கப்படாமல் இருக்கவும் உதவுகிறது.
 
மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகமாக்குவதில் ப்ளாக் டீ'யில் உள்ள குறைந்த அளவிலான காப்ஃபைன் உதவுகிறது. தினமும் ப்ளாக் டீயை தொடர்ந்து பருகுவதன் மூலம், நரம்பு மண்டலங்கள் வலுவாகும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.
 
ப்ளாக் டீயில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் எலும்புகளையும், எலும்புத் திசுக்களை வலுவாக்குகின்றன.
 
ப்ளாக் டீ யைக் குடிப்பதால், நம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புச் சத்துக்கள் குறைந்து விடுகிறது, உடல் எடையை குறைப்பதில்  முக்கிய பங்கு வகிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்