முகப்பருவை போக்க ஐஸ் கட்டி, மிகவும் சிறந்தது. இது முகப்பரு ஏற்படுத்தும் வலியையும், முகப்பரு சிவந்து போவதையும், வீக்கமடைவதையும் தடுக்கும். மேலும் முகப்பருவால் ஏற்படும் காயங்களையும் குணமாக்கும்.
ஐஸ் கட்டி கொண்டு மசாஜ் செய்வதால் முக கருமை மட்டுமல்லாமல் மேலும் பல நன்மைகளை முகத்திற்கு தருகிறது. சிலருக்கு அதிகமாக முகம் வியர்க்கும். இதனால் போட கூடிய மேக்கப் சிறிது நேரத்திலே கலைந்து விடும். இதை தவிர்க்க மேக்கப் போடுவதற்கு முன்னதாக ஐஸ் க்யூபைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்யுங்கள். அப்படி செய்வதால் மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்கும்.
சிறிதளவு காய்ச்சாத பாலை ஃபிரீஸரில் வைத்து விட்டு வெளியே சென்று விட்டு வந்த பிறகு முகத்தைக் கழுவிய பின்னர், இந்த ஐஸ் கட்டியால் முகத்தை ஸ்க்ரப் செய்தால், இறந்த செல்கள் நீங்கி ஃபேஷியல் செய்ததுபோல பளபளப்பாக மாறும்.