திங்கட்கிழமையன்று, திங்கள் எனப்படுகிற சந்திரனைச் சூடிய சிவபெருமானுக்கு உரிய, சிவனாரை தரிசிக்கக் கூடிய அற்புதமான நாளாக வழிபட்டு வருகிறார்கள் சிவனடியார்கள்.
சிவ வழிபாட்டில் மிக முக்கியமானதாகக் கொண்டாடப்படுகிறது பிரதோஷம். அற்புதமான பிரதோஷ நன்னாளில், சிவன் கோயிலுக்குச் செல்வதும் நந்திதேவரையும் சிவலிங்கத் திருமேனியையும் தரிசிப்பதும் புண்ணியத்தைத் தந்தருளும் என்று போற்றுகிறார்கள் சிவாச்சார்யப் பெருமக்கள்.
பிரதோஷ தரிசனம், நம் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கவல்லது. முற்பிறவியில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களையெல்லாம் போக்கவல்லது. ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷமும் மகத்துவம் வாய்ந்தவை. எண்ணற்ற பலன்களைத் தரக்கூடியவை.