அன்னையானவள் இந்த உலகில் தீய சக்திகளிடமிருந்து நம்மை காத்தருளவே அவதரித்தவள். எதிரி ஏவிவிடும் தீய ஆற்றலை அழிக்கவே உருவெடுத்தவள். இந்த தீய சக்தி எனும் பேய், பிசாசு, ஏவல், பில்லி இவை அனைத்திற்கும் வலிமை கூடும் நேரம் இரவு நேரம் தான்.
ஜோதிடத்தில் இரவுக்கு அதிபதி சனி - கருப்பு இருட்டு, புதர், எல்லாம் சனி ஆதிக்கம் செய்யும் இடமாகும், நவகிரகங்களிலே இவர் கர்மகாரகன் என்று அழைக்கப்படுகிறான்.
ஈசன் முதல் சகல தேவர்களையும் ஆட்டி வைத்த வரலாறு இவருக்கு உண்டு, இவர் கட்டுப்பட்டு நிற்கும் ஒரே கடவுள் வாராகி மட்டுமே. வாராகி பக்தனை ஒரு போதும் சனிபகவான் நெறுங்குவதே கிடையாது ஏனெனில் கரிய நிறம், எருமை, இதன் எல்லாம் சனி ஆதிக்கம், ஆகவே இவர் "ஆயுள்காரகன்" என்று அழைக்கப்படுகிறான். இதன் காரணத்தினாலே ஆயுள் முடிக்கும் இறைவன் எமதர்மன் எருமையை வாகனமாக வைத்துள்ளார்.