நாரத்தங்காயால் வாதநோயும், குன்மமும், வாலுள்ள மலக்கிருமியும் நீங்கும். பசியுண்டாகும். இதன் புளிப்பினால் தேகம் சுத்தியாகும்.
நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. நார்த்தம் பழத்தை, காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.
மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு முக்கிய மருந்தாகும். கனியின் தோல், வயிற்றுப்போக்கை நிறுத்தும். நார்த்தம் பழத்தை சாறு எடுத்து, அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.
கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச்சாறு எடுத்து, தண்ணீர் கலந்து அதில் சிறிது தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்தி வந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்.