நாட்டு கோழி முட்டையை சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாகும். எலும்புகள் உடைந்து வைத்தியம் மேற்கொண்டு வருபவர்கள் நாட்டு முட்டையை சாப்பிட்டு வந்தால் உடைந்த எலும்புகள் சீக்கிரத்திலேயே கூடும். உடல் நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஓய்வில் இருப்பவர்களுக்கு நாட்டு கோழி முட்டை சிறந்த நோய் கால உணவாக இருக்கிறது.
நாட்டு கோழி முட்டை கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் அனைத்து வகையான சத்துக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. இம்முட்டையில் இருக்கும் புரதம், கால்சியம் போன்ற சத்துகள் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் கருவில் வளரும் குழந்தைகளுக்கும் தேவையான ஊட்டங்களை அளிக்கிறது.