செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.
பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும். மேலும் இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.