தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !!
தேங்காய், இனிப்புச் சுவை உடையது. பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளுக்கு இணையான ஊட்டச்சத்து நிறைந்தது. தேங்காய் ஓட்டுக்கும் பருப்புக்கும் இடையே உள்ள தோல் போன்ற பகுதி, கொழுப்பைக் கரைக்கும் தன்மை உடையது.
தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து, தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது.
தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
தேங்காயில் இருக்கும் மோனோலாரின் மட்டும் லாரிக் அமிலங்கள் நமது ரத்தத்தில் கலந்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு உடலில் பரவி இருக்கின்ற நுண்கிருமிகளை அழித்து, உடலை தூய்மை செய்வதோடு, மேற்கொண்டு புதிய நுண் கிருமிகள் தொற்று ஏற்படாதவாறு காக்கிறது.
தேங்காயை பச்சையாகவே மென்று சாப்பிடுவதால் இந்த நார்ச்சத்து முழுமையாக நமக்குக் கிடைக்கிறது. மேலும் உடலில் செரிமானத்திற்கு தேவையான என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
இளநீர் உடம்புக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. தாகத்தைத் தணித்து செரிமானத்தைச் சீராக்கும். சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகப் பாதையைச் சுத்தப்படுத்தும். சிறுநீரகக்கல் பிரச்னை, சின்னம்மை, பெரியம்மை நோய்கள் வராமல் தடுக்கும். ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா குறைபாட்டைச் சரிசெய்ய இளநீர் உதவுகிறது.
தென்னையில் இருந்து வரும் பூவைப் பயன்படுத்தி கஷாயம் செய்து அருந்தினால், அதீத ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் குணமடையும். ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியம் செய்யப் பயன்படுகிறது.