தினசரி உணவில் வெந்தய கீரைகளை சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள் !!

வெள்ளி, 25 மார்ச் 2022 (17:20 IST)
வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும். மேலும் கண்பார்வைக் குறைவு நோய்கள் இருப்பவர்கள் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.


வெந்தயக் கீரை நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும். அதனால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஓர் சிறந்த மருந்தாகும்.

வெந்தயக் கீரையில் ஏ வைட்டமின் சக்தியும், சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் இதை சாப்பிடும் போது மாரடைப்பு, கண் பார்வை குறைபாடு, வாதம், சொறி சிரங்கு, இரத்த சோகை ஆகியவை குணமடையும்.

வெந்தயக் கீரையின் தண்டை அரைத்து, மோருடன் குடித்துவர, வயிறு தொடர்பானப் பிரச்னைகள் தீரும். வெந்தயம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளைப் போக்கும்.

வெந்தயக் கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் வாய்ப்புண் குணமாகும். தொடர்ந்து இக்கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் பலப்படும் தசை நார்களும் நரம்புகள் பலப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்