முடியின் வளர்ச்சிக்கு கறிவேப்பிலை மிகவும் உதவும். தினமும் கறிவேப்பிலை உணவில் சேர்த்து வந்தால் உங்களுக்கு நரைமுடி, முடி கொட்டுதல், முடி உடைதல் போன்ற பிரச்சினை ஏற்படாது.
கறிவேப்பிலையில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை உண்டு வந்தால் உங்களுக்கு நரை முடி, செல் அழிவு, விரைவில் வயதான தோற்றம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.
கறிவேப்பிலையில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்போரோஸ் போன்ற கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் எ, பி, சி, இ போன்ற விட்டமின்களும் நிறைந்துள்ளது. தினமும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலையினை உண்டு வந்தால் உங்களின் உடல் பருமன் கணிசமாக குறையும்.