பீட்ரூட் ஜூஸில் உள்ள நைட்ரேட்ஸ் இரத்த நாளங்களை விரியச் செய்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது . இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறைவதால் உடலுக்கு நன்மை பயக்கும்.
பீட்ரூட் ஜூஸ் குறைந்த இரத்த அழுத்தத்திற்கு உதவுகிறது. தினமும் 8 அவுன்ஸ் வரை பீட்ரூட் ஜூஸ் குடிப்பவர்கள் சிஸ்டாலிக், டயஸ்டோலிக் போன்ற இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பீட்ரூட் ஜூஸில் உள்ள நைட்ரேட்ஸ் பொருள் இரத்தத்தில் கலக்கும் போது நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. இது இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்கிறது.
பீட்ரூட்டில் உள்ள ஃபைபர் பெக்டின் கல்லீரலால் வடிகட்டப்பட்ட நச்சுத்தன்மையை சுத்தம் செய்கிறது, இதனால் உடல் அவற்றை மீண்டும் உறிஞ்ச முடியாது. மேலும் நச்சுத்தன்மையினை அகற்றும் செயல்பாட்டில் பீட்ருட் ஜூஸ் உதவியாக இருக்கின்றது.