தேங்காய் பால் குடிப்பதால் என்ன பயன்கள் தெரியுமா....?

புதன், 14 செப்டம்பர் 2022 (09:20 IST)
தேங்காய்ப்பால் சத்துக் குறைவினால் வரும் குழந்தைகள் உடலைச் சரிசெய்து ஊட்டம் அளித்து வளர்ச்சியைத் தருகிறது. தேங்காயைத் துருவிப் போட்டு அரைத்து போட்டும் சமையலில் பயன்படுத்துவார்கள். உலர்த்தப்பட்ட தேங்காய்யும் உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது.


தேங்காய் பாலை காய்ச்சி தேங்காய் எண்ணெய் எடுக்கலாம். அந்தப் பசும் எண்ணெய் தலை வழுக்கையைப் போக்கி முடி வளர்க்கும். தீப் புண்களை ஆற்றும்.

தேங்காயில் உயர் ரகப் புரதம், அமினோ அமிலங்கள்,அதிக அளவில் பொட்டாசியம், சோடியம், மெக்னிசியம்,  பாஸ்பரஸ், கந்தகம் முதலியவை உள்ளன. உயிர்ச் சத்து B அதிக அளவிலும் A சிறிதும் இருக்கிறது.

இளம் தேங்காயை ஆட்டி எடுத்து தேங்காய் பாலில் சீக்கிரத்தில் செரிமானம் அளிக்கக்கூடிய அமினோ அமிலமும்,  உடலைச் சரிப்படுத்தி வளர்ச்சி அளிக்கக் கூடிய கூடுதல் புரதமும் இருக்கிறது. தேங்காய்ப் பால் மூத்திர கோசங்கள் சுத்தமாக்கப் பயன்படுகிறது.

தேங்காய்ப்பாலை முகத்தில் உள்ள மாசுக்கள் குறிப்பாக அம்மை வடுக்கள் அகற்றத் தடவி வரலாம். தலைக்குத் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும். தேங்காய் பால் குளிர்ச்சி ஊட்டல், ஊட்டம் தருதல், மலமிளகுதல், நீர் பிரிதல்,  போன்ற நலன்களை உண்டாக்கியது.

எலும்புருக்கி நோயின் போது சோர்ந்து பலவீனம் அடைந்த போதும், நாள்தோறும் நான்கு முதல் 8 அவுன்ஸ் தேங்காய் பால் கொடுத்து வந்தால் நல்ல பலன் கிட்டும். தேங்காய் பால் காய்ச்சல் தணிக்கவும், தாகத்தைப் போக்கவும் பயன்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்