தாம்பத்திய உறவு சிறக்க உதவும் கற்றாழை

செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (20:59 IST)
கற்றாழையில் பல்வேறு மருத்துவக் குணங்கள் உள்ளன. தாம்பத்திய உறவுக்கு கற்றாழை ஒரு சிறந்த மருந்து. 


 

 
கற்றாழையில் பலவகை உண்டு, அதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கற்றாழையில் இருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம் எனப்படுகிறது.
 
கற்றாழை, உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருட்கள் மற்றும் மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து இட்லிப் பானையில் பால் விட்டு வேர்களை தட்டில் வைத்துப் ஆவியில் வேக வைத்து எடுத்து நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.
 
அதை தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்ய உறவு மேம்படும். தாம்பத்ய உறவுக்கு கற்றாழை ஒரு சிறந்த மருந்து.

வெப்துனியாவைப் படிக்கவும்