எல்லா வகை சருமத்திற்கும் அற்புத பலன் தரும் சோற்றுக்கற்றாழை !!

வியாழன், 13 அக்டோபர் 2022 (17:54 IST)
பெண்கள் முகத்தில் ஏற்படும் அழகு பிரச்சனைகளில் ஒன்று கரும்புள்ளி மற்றும் சரும வறட்சி ஆகும். இதைப் போக்குவதற்கு கற்றாழை ஜெல்லை எடுத்து தடவி வந்தால் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும்.


ஆண்களுக்கு சவரம் செய்யும் பொழுது ஏற்படும் காயங்கள் மற்றும் எரிச்சலைப் போக்குவதற்கு கற்றாழைச் சோற்றை எடுத்து தடவினாலே நல்ல பலன் கிடைக்கும்.

குளியல் எண்ணெய் செய்ய: அரை கிலோ கற்றாழை சோற்றுப் பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும் அதனுடன் அவர்களிடம் நல்லெண்ணெய் கலந்து வெயிலில் வைத்து விட வேண்டும். இவ்வாறு வைத்த எண்ணெயை 30 நாட்கள் கழித்து எடுத்து வாசனை கலந்து பிறகுவடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை குளியலின் போது பயன்படுத்தினால் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும்.

சோற்றுக்கற்றாழை உடன் இனிப்பு சேர்த்து  சாப்பிட்டு வந்தால்  மலச்சிக்கல், மூட்டு வலி, தலைவலி, சர்க்கரை நோய் போன்றவை குணமாகும். மேலும் இது மூல நோய் உள்ளவர்களுக்கு மா மருந்தாக பயன்படுகிறது.

மேலும் படிக்க:பலவித நோய்களுக்கும் அற்புத மருந்தாகும் சோற்றுக்கற்றாழை !!

கற்றாழையில் உள்ள சத்துப் பொருட்கள் மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதற்கு கற்றாழை ஜெல்லை வலியுள்ள மூட்டுகளில் மீதும் தடவியும் மற்றும் கற்றாழை உட்கொண்டு வந்தால் மூட்டுகள் நன்றாக இயங்கும்.

கற்றாழை சோற்றுப் பகுதியை மோரில் கலந்து தினமும் குடித்துவர  உடல் சூட்டினால் ஏற்படும் வறட்சி மற்றும் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், முகக் கருமை, போன்றவை குணமாகி முகம் பொலிவாகும்.

Edited by Sasikala

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்