அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் நிறைந்த கண்டங்கத்தரி!!

கண்டங்கத்தரி இரத்த அழுத்தத்தை சரிசெய்யக் கூடியது. கண்டங்கத்தரியின் முழு செடியையும் பிடுங்கி காயவைத்து பொடியாக்கி ஆஸ்துமா நோயாளிகளுக்கு கொடுக்க குணம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் வறட்டு இருமல், சளித்தொல்லை, வியர்வை நாற்றம், கீல்வாதம்  போன்றவைகளுக்கு ஒரு சிறந்த மூலிகையாகும்.
கண்டங்கத்தரியை காயவைத்து சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளி வெளியேறும். நல்ல பசி உண்டாகும். சிறு  குழந்தைகளுக்கு ஏற்படும் நாட்பட்ட இருமலுக்கு இந்த கண்டங்கத்தரி பழத்தை உலர்த்தி பொடி செய்து தேவையான அளவு தேன் சேர்த்து  இருவேளை கொடுக்க இருமல் சரியாகும்.
 
கண்டங்கத்தரி பழத்தை நெருப்பில் இட்டு வெளியாகும் புகையை வாய் மூலம் புகைப் பிடிக்க பல்வலி, பல்லில் உள்ள கிருமிகள் நீங்கும்.  கண்டகத்தரியின் முழு சமூலம் 1 கைபிடி, ஆடாதொடை இலை 1 கைபிடி, விஷ்ணுகரந்தை சமூலம் 1 கைபிடி, சீரகம் 10 கிராம், சுக்கு 10  கிராம் இவற்றை லேசாக தட்டி 2 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து 500 மி.லி. வற்றவைத்து இறக்கி 100 மி.லி. அளவு எடுத்து 5 வேளை  அருந்தி வர புளுசுரம், காய்ச்சல் சரியாகும்.
 
கண்டங்கத்தரி வேர், ஆடாதொடை வேர் இரண்டையும் 40 கிராம் அளவு எடுத்து அரிசி திப்பிலி 5 கிராம் சேர்த்து லேசாக தட்டி 2 லிட்டர்  தண்ணீரில் கொதிக்க வைத்து 500 மி.லி. வற்றவைத்து இறக்கி 100 மி.லி. அளவு எடுத்து 5 வேளை குடிக்க ஆஸ்துமா, இரைப்பிருமல், கபநோய்,  பீனிசம் சரியாகும். சளிதொல்லை நீங்கும்.
 
கண்டங்கத்தரி பூ 100 கிராம் அளவு எடுத்து காயவைத்து அதனுடன் சீரகம், திப்பிலி, நெல்லிமுல்லி ஆகியவற்றை சேர்த்து பொடியாக்கி 2  கிராம் அளவு எடுத்து 48 நாட்கள் பாலில் கலந்து உண்டுவர கண்பார்வை கூர்மை பெறும்.
 
கண்டங்கத்தரி இலைச் சாறு, வாத நாராயண இலைச் சாறு, முடக்கத்தான் இலைச் சாறு இவற்றை வகைக்கு 100 மி.லி. அளவு எடுத்து 1  லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி 50 கிராம் பச்சை கற்பூரம் பொடி செய்து இந்த எண்ணெய்யுடன் சேர்த்து மூட்டுவலிக்கு ஒத்தடம்  கொடுக்க மூட்டுவலி குணமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்