உணவு டெலிவரி செய்யும் பெண்களுக்கு சுடிதாரை அறிமுகம் செய்த சொமேட்டா !

Mahendran

சனி, 9 மார்ச் 2024 (17:45 IST)
இதுவரை ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பெண்களுக்கு டி-ஷர்ட் உடையாக வைத்திருந்த நிலையில் தற்போது சுடிதார் சீருடையாக சொமேட்டா நிறுவனம் மாற்றி அமைத்துள்ளது 
 
நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து பெண்களுக்கு இந்த புதிய சீருடைய சொமேட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து சொமேட்டா தனது செய்து குறிப்பில் தெரிவித்த போது ’எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு டீ சர்ட் அணிவது அசெளகரியத்தை ஏற்படுத்தியதாக எங்களுக்கு தெரியவந்தது
 
இதனால் தான் நாங்கள் பெண்களுக்கு சீருடை மாற்றியுள்ளோம் என்று சொமேட்டா  தெரிவித்துள்ளது. சுடிதார் சீருடைய அணிந்த பெண்களின் வீடியோவையும் சொமேட்டா  நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது 
 
இனி இந்தியா முழுவதும் உள்ள சொமேட்டா பெண் ஊழியர்கள் சுடிதார் அணிந்து டெலிவரி செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்