கழிவறையில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்ட மற்ற பயணிகள் பதற்றத்துடன் கதவை உடைத்தனர். கழிப்பறையில் இருந்த நபரை வெளியே இழுத்து அவர் மீது இருந்த தீயை அணைத்தனர். அப்போது காயம்குளம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. ரயில்வே ஊழியர்கள் அந்த பெட்டியை மற்ற பெட்டிகளில் இருந்து தனியாக கழற்றி தீ பரவாமல் தடுத்தனர்.
தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அந்த இளைஞர் நவாஸ் (24) என்பதும் அவர், வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. உடலில் பலத்த தீக்காயம் அடைந்த நவாஸை போலீஸார் ஆலப்புழை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.