வங்கி கணக்கில் விழுந்த பணம்: வீடு, கார் வாங்கி அதிர்ச்சி அளித்த பெண்

வியாழன், 27 அக்டோபர் 2016 (13:19 IST)
தவறுதலாக ஒரு பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.70 லட்சம் வந்து சேர, அதை அந்த பெண் வீடு, நிலம், கார் என்று வாங்கி செலவு செய்துள்ளார். இதை அறிந்த வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


 

 
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பெண்ணமல்லூர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு மாதம் தோறும் வரும் பென்சன் பணம், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் வங்கி கணக்கில் போடப்படும்.
 
இந்த பெண் அதை எடுத்து உரியவர்களுக்கு பிரித்து கொடுப்பார். அதே போன்று ஒருநாள் அவரது வங்கி கணக்கில் ரூ.70 லட்சம் தவறுதலாக வந்துள்ளது. இதைப்பற்றி அவர் வங்கி அதிகாரிகள் யாரிடமும் தெரிவிக்காமல் கணவரிடம் கூறியுள்ளார்.
 
இருவரும் சேர்ந்து அந்த பணத்திற்கு 2 வீடுகள், 1 ஏக்கர் நிலம், கார்கள் என்று வாங்கி சொகுசாக இருந்துள்ளனர். சில நாட்களில் வங்கி அதிகரிகள் 70 லடசம் பணம் பற்றி தெரியவந்தது.
 
அந்த பெண்ணின் வீட்டை தேடி சென்று, அது தவறுதலாக வந்த பணம் அதை திரும்ப செலுத்திவிடுமாறு கூறியுள்ளானர். ஆனால் அந்த பெண் பணத்தை செலவு செய்ததை அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
அந்த வாங்கி அனைத்தையும் விற்று பணத்தை திரும்ப தருவதாக தெரிவித்துள்ளார். வங்கி அதிகாரிகள் பணத்தை அந்த பெண்ணிடம் இருந்து எப்படி வசூலிப்பது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
 
வீடுகளையும், நிலத்தையும் எப்போது விற்பது. அப்படி விற்றாலும் முழு பணத்தை திரும்ப தர இயலுமா என்ற சந்தேகத்தில் வங்கி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்