கேரளாவில் 6.5 கிலோ மீட்டர் நீளமான வென்னிலா கேக்கை 1,500 பேக்கர்கள் தயாரித்தது கின்னஸ் சாதனையில் இடம்பெறவுள்ளது.
கேரளாவில் 6.5 கிலோ மீட்டர் நீளமான வென்னிலா கேக்கை 1,500 பேக்கர்கள் தயாரித்துள்ளனர். திருச்சூரில் கேரளா பேக்கரிகள் சங்கம் சார்பில் நடந்த இந்த விழாவை காண மக்கள் திரண்டு வந்தனர்.
இந்த நீளமான கேக்கை தயாரிக்க 12,000 கிலோ சக்கரையும், மாவும் உபயோகித்துள்ளனர். சுமார் 4 மணி நேரம் இக்கேக்கை தயாரித்துள்ளனர். இந்த கேக் 10 செ.மீ. அகலம் கொண்டது. மேலும் 27,000 கிலோ கொண்டது.
முன்னதாக சீனாவின் சிக்சி கவுண்டி பேக்கரி உரிமையாளர்கள் இணைந்து 3.2 கிலோ மீட்டர் நீளமுடைய கேக்கை தயாரித்த நிலையில், தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ளனர் கேரளா பேக்கரி சங்கத்தை சேர்ந்தவர்கள்.