பெண் தூக்கி எறிந்த பவர் பேங்க் வெடித்தது: டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு

வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (14:47 IST)
டெல்லி விமான நிலையத்தில் சோதனையின் போது பெண் ஒருவர் தூக்கி எறிந்த பவர் பேங் வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
கடந்த 28ஆம் தேதி டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மாளவிகா திரிபாதி என்ற பெண் தர்மசாலா செல்ல இருந்தார். அவரது டிக்கெட் மற்றும் பொருட்கள் சோதனை செய்யப்பட்டது.
 
ஸ்கேன் செய்தபோது அவர் வைத்திருந்த பையில் ஏதோ சந்தேகப்படக்கூடிய பொருளாக இருந்தது. பையில் இருந்த எடுத்தபோது அது பவர் பேங் என்று தெரியவந்தது. சோதனையாளர்கள் அந்த பெண்ணிடம் பவர் பேங்கை கை பையில் வைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
 
ஆனால் அந்த பெண் கோபத்தில் பவர் பேங்கை சுவரை நோக்கி தூக்கி எறிந்துள்ளார். சுவரில் பட்டு கீழே விழுந்த அந்த பவர் பேங்க் வெடித்தது. இதனால் பதற்றமடைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்தனர்.
 
பவர் பேங்கை காவல்துறையினர், கையெறி குண்டு என்று சோதனை செய்தனர். சோதனையில் பவர் பேங்க்தான் வெடித்தது என்பது தெரியவந்ததும் அந்த பெண்ணை வெளியே விட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்