மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்.. எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு..!

செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (16:42 IST)
மக்களவையில் இன்று மகளிர்க்கு இட ஒதுக்கீடு குறித்த மசோதா அறிமுகப்படுத்தி உள்ள நிலையில் இந்த மசோதாவுக்கான நகல் வழங்கப்படவில்லை என எதிர்கட்சிகள் அமளி செய்தனர். இதன் காரணமாக மக்களவை நாளை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இந்த மசோதா குறித்து பிரதமர் கூறிய போது மகளிர் மேம்பாடு என பேசுவதை விட அதனை செயல்படுத்த வேண்டியது அவசியம் என்றும் விண்வெளி உள்ளிட்ட துறைகளில் பெண்கள் ஆதிக்கம் அதிகம் செலுத்துகிறார்கள் என்றும் முன்னாள் பிரதமர் நேருவுக்கு கொடுக்கப்பட்ட செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் உள்ளது பெருமையானது என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் கசப்பான அனுபவங்களை மறந்து விட்டு நாடு முன்னேறி வெல்ல வேண்டும் என்றும் கொள்கைகள் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் நமது குறிக்கோள் தேசத்திற்கு சேவை செய்வதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்