தன்னிடம் இருந்த பணத்தை, புதிய நோட்டாக மாற்ற வந்த பெண் ஒருவர், அது முடியாமல் போனதால் வங்கி வாசலிலேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மநிலம், குஷிநகர் மாவட்டம், கோரக்பூரைச் சேர்ந்தவர் தித்ரஜி(40). இவர் ஒரு சலவைத் தொழிலாளி. படிப்பறிவில்லாத இவர், தன்னிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஒப்படைத்து, புதிய நோட்டு பெறுவதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். அது முடியாது என்று தெரிந்தவுடன், தன்னுடைய கணக்கில் டெபாசிட் செய்ய முயன்றுள்ளா. ஆனால், நேற்று வங்கிக்குகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், 2 நாட்கள் கழித்து அவரை வரச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், படிப்பறவில்லாததால் தன்னிடம் இருந்த பணம் செல்லாமல் போய் விட்டது என்று நினைத்த அவர், பணத்தை மாற்ற முடியாமலே போய்விடுமோ என்ற விரக்தியில், மன உளைச்சல் அடைந்து வங்கியை விட்டு வெளியே வந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, வங்கி வாசலிலேயே மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
அவரது உடலுக்கு அருகே ஆயிரம் ரூபாய் நோட்டு 2ம், அவரின் பாஸ்புக்கும் கிடந்துள்ளது. அதன்பின், அங்கிருந்தவர்கள் அவரின் உறவினருக்கு தகவல் அளித்தனர். அவரது உடலைக் கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.