மூளையில் ஆபரேசன் நடந்தபோது ஜூனியர் என்.டி.ஆர். படம் பார்த்த பெண்..!

Siva

வியாழன், 19 செப்டம்பர் 2024 (07:10 IST)
ஆந்திரா மாநிலத்தில், 55 வயது ஆந்தலக்‌ஷ்மி எனும் பெண்ணுக்கு மூளையில் கட்டி அகற்றுவதற்காக காக்கிநாடா அரசு மருத்துவமனையில் "அவெக் கிரேனியோட்டமி" முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சையின்போது நோயாளி விழித்திருக்க விருப்பம் தெரிவித்த நிலையில்  அவர் விரும்பிய ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ’அதுர்ஸ்’ படத்தை செல்ஃபோனில் மருத்துவர்கள் காண வைத்தனர். அதன்பின் சுமார் 2.30 மணி நேரம் நீடித்த சிகிச்சையை வெற்றிகரமாக மருத்துவர்கள் முடித்தனர்.

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, அவர் ஐந்து நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அவெக் கிரேனியோட்டமி" சிகிச்சை, மூளையில் சிகிச்சை செய்வதற்கான சிறந்த முறையாக கருதப்படுகிறது, இது நரம்பியல் பாதிப்புகளை குறைக்கும். மேலும் நோயாளிகள் விழித்திருக்கும் போது அறுவை சிகிச்சை செய்தால், நரம்பியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்