மீண்டும் டாடா கைக்கு செல்கிறது ஏர் இந்தியா

வியாழன், 22 ஜூன் 2017 (04:01 IST)
இந்தியாவில் முதன்முறையாக விமான சேவையை தொடங்கிய இறுவனம் டாடா குழுமம்தான். ஆனால் கடந்த 1953 ஆம் ஆண்டு டாடாவின் விமான நிறுவனத்தை மத்திய அரசு தேசியமயமாக்கி தனதாக்கி கொண்டது. அந்த நிறுவனம்தான் ஏர் இந்தியா



 


இந்த நிலையில் தற்போது ஏர் இந்தியா கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருவதால் மீண்டும் டாடா அந்த நிறுவனத்தை கைப்பற்ற முடிவு செய்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தின் 51% பங்குகளை கைப்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த பேச்சுவார்த்தை டாடா குழுமத்திற்கும் ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மிகவிரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு அபோது டாடா குழுமத்தின் த்லைவராக இருந்த ரத்தன் டாடா ‘ ஏர் இந்தியா நிறுவனத்தை  திரும்ப்பப்பெற்றால் மகிழ்வேன்’ எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

வெப்துனியாவைப் படிக்கவும்