டீ கப்பில் லிப்ஸ்டிக் மார்க், தலையணையில் ஆணுறைகள்: வீணா போன செட் அப், கம்பி எண்ணும் பெண்!

வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (11:40 IST)
கள்ளக்காதலுக்கு தொந்தரவாக இருந்த கணவனை ப்ளான் போட்டு தீர்த்துக்கட்டிய பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். 
 
தானேவில் மிராரோடு கிழக்கு பகுதியில் வசித்து வந்த தம்பதியினர் பிரமோத் - தீப்தி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் பிரமோத் கடந்த மாதம் 15 ஆம் தேதி வீட்டில் மரணமடைந்தார். அப்போது அவர் தலையணையின் கீழ் நிறைய ஆணுறைகளும், டீ கப்பில் லிப்ஸ்டிக் மார்க்கும் இருந்துள்ளது. 
 
போலீஸார் இந்த மர்ம மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பிரமோத்தின் போஸ்ட்மார்ட்டம் ரிபோர்ட்டில் அவர் அதிக அளவில் தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டதகாவும், கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இதனால் போலீஸார் இது கொலை என் முடிவு செய்து பிரமோத்தின் மனைவி தீப்தியிடம் இருந்து விசாரனையை துவங்கியுள்ளனர். முதலில் விசாரணையின் போது முன்னும் பின்னுமாக பதில் அளித்த தீப்தி ஒரு கட்டத்தில் அவர்தான் கணவனை கொன்றதாக ஒப்புக்கொண்டார். 
 
தீப்தி விசாரணை தெரிவித்ததாவது, நான் கேரளாவில் பணியாற்றினேன். அப்போது எனக்கும் வேறு ஒரு நபருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை என் கணவருக்கு தெரியவந்ததும் என்னிடம் தினமும் சண்டை போட்டுவந்தார். எனவே கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை கொலை செய்ய முடிவு எடுத்தேன். 
இதனால் மகளை அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு டீ-யில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன். கணவர் மயக்கமடைந்ததும் கழுத்தை நெறித்து கொலை செய்தேன். மேலும் என் மேல் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக டீ கப்பில் லிப்ஸ்டிக் மார்க், ஆணுறைகள் ஆகியவற்றை ஓட்டு கணவருக்கு பலருடன் தொடர்பு இருப்பது போல் செட் அப் செய்தேன் என தெரிவித்துள்ளார். 
 
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தீப்தி மற்றும் அவனது கள்ளக்காதலனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்