தமிழ்நாட்டிற்கு ஏன் தண்ணீர் தரவேண்டும்? முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வி..!

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (14:52 IST)
தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டே உத்தரவிட்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டிற்கு ஏன் தண்ணீர் அளிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் சாகுபடி நேரத்தில் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. 
இந்த ஆண்டு கூட தண்ணீர் திறக்கவில்லை என கர்நாடகா மீது தமிழ்நாடு அரசு குற்றம் காட்டியிருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு ஏன் தண்ணீர் தர வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளார். 
 
காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டலை நாங்கள் ஏன் பின்பற்ற வேண்டும் என்ற கேள்வி எழுப்பிய அவர் தமிழ்நாடு ஒவ்வொரு ஆண்டும் சாகுபடி பரப்பை அதிகரித்து வருகிறது என்றும் கர்நாடகாவில் சாகுபடிக்கு தண்ணீர் போதவில்லை என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்