ராம அவதாரத்துக்கு பிந்தைய அவதாரமான கிருஷ்ண அவதாரத்திற்கு பால கிருஷ்ணர், இளமை ததும்பு ஆயர்பாடி புல்லாங்குழல் கிருஷ்ணன், பாமா ருக்மணி சகிதம் காட்சி தரும் கிருஷ்ணர் என பல ரூபங்களிலும் கிருஷ்ணர் வணங்கப்படுகிறார். அதுபோல ராம அவதாரத்திற்கு மதுரா, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல திருஸ்தலங்களில் கோதண்டபாணியாக, கேசவ பெருமாளாக, பட்டாபிராமனாக ராம பெருமான் காட்சி தருகிறார். ஆனால் ராமரின் குழந்தை தோற்றம் எந்த கோவிலிலும் பிரசித்தி இல்லை.
அந்த வகையில் ராமர் பிறந்த அயோத்தியில் கட்டப்படும் கோவில் குழந்தை ராமரை பிரதிஷ்டை செய்வது ஏற்புடையதாக அமைகிறது. சூரிய வம்சியான ஸ்ரீராமர் சிலையை சிருஷ்டிக்கும் நாள் சூரியனின் அருள் தரும் உத்தராயணத்தில் அமைய வேண்டும் என்பதாலேயே இந்த தினத்தில் குழந்தை ராமரை பிரதிஷ்டை செய்கின்றனர். இதன்மூலம் இந்தியாவில் குழந்தை ராமர் சிலை உள்ள பிரபலமான கோவிலாக அயோத்தி ராமர் கோவில் புகழ்பெறுகிறது.