ஆனால் 2016-ம் ஆண்டு வெறும் ரு.93 லட்சம் மட்டுமே செலவழிக்கப்பட்டதாக டெல்லி அரசு கூறியுள்ள நிலையில் இந்த ஆண்டு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை அளிக்கவே இல்லை. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி இந்த பணத்தை சுற்றுச்சூழல் நலனுக்காக செலவு செய்யாமல் கையிருப்பு வைத்திருப்பதாக திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ளது.