சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ, தயாநிதி மாறனை ஏன் கைது செய்யவில்லை: நீதிபதி கேள்வி

வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (18:14 IST)
ஏர்செல் மாக்சிஸ் வழக்கில் ரூ.1 கோடி முறைகேடு செய்ததாக ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ ரூ.749 கோடி முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட தயாநிதி மாறனை ஏன் கைது செய்யவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த 2006-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது போது மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் ரூ 3,500 கோடி முதலீடு செய்ததாகவும், இதற்காக கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாகவும் ப.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில்  ப.சிதம்பரம் 1.13 கோடி அளவில் பலனடைந்தார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது
 
இந்த நிலையில் இதே வழக்கில் தயாநிதி மாறன் மூலம் கைமாறிய ரூ 749 கோடி கைமாறியதாக குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் அவரை விட சிறியத் தொகை பலன் அடைந்த ப.சிதம்பரத்தை மட்டும் கைது செய்துவிட்டு பெரிய தொகை முரைகேடு செய்ததாக குற்றச்சாட்டு இருக்கும் தயாநிதி மாறன் உள்ளிட்டோரை மட்டும் விசாரணை அமைப்புகள் கைது செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, ஒரே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரிடம் விசாரணை அமைப்புகள் பாரபட்சம் பார்ப்பது சட்டத்துக்கு புறம்பானது என்றும் தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்