கார்த்திக் சிதம்பரத்தின் பணத்தை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (15:18 IST)
கார்த்திக் சிதம்பரம் நிபந்தனையாக டெபாசிட் செய்த பணத்தை இப்போது விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு, ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு சென்று வருவதற்காக கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தார்.

கார்த்திக் சிதம்பரத்தின் மனுவை விசாரித்த நீதிமன்றம், வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளித்தது. ஆனால் வைப்புத் தொகையாக 10 கோடி ரூபாயை செலுத்திவிட்டு செல்லுமாறு உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி கார்த்திக் சிதம்பரம், 10 கோடி ரூபாயை உச்சநீதிமன்றத்தின் கருவூலத்தில் செலுத்தினார்.

இந்நிலையில் அந்த டெபாசிட் தொகையை திரும்ப தருமாறு கடந்த மே மாதம் கார்த்திக் சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது மீண்டும், அந்த டெபாசித் தொகையை திரும்ப தருமாறு மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி, அடுத்த 3 மாதங்களுக்கு 10 கோடி ரூபாய் பிக்சட் டெபாசிட்டாக இருக்கும் என உத்தரவிட்டு, கார்த்திக் சிதம்பரத்தின் மனுவை ஏற்க மறுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்