நாட்டின் சிறந்த பிரதமர் யார் ? கருத்துக் கணிப்பில் தகவல்

Sinoj

திங்கள், 19 பிப்ரவரி 2024 (21:03 IST)
நாட்டின் சிறந்த பிரதமர் யார் ? என்ற கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
 
இன்னும் சில வாரங்களில் நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
 
இந்த் அனிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான மக்களின் மனநிலை குறித்த கருத்துக் கணிப்பை சி- வோட்டர், இந்தியா டுடே ஆகிய  நிறுவனங்கள் நடத்தின.
 
இதில், சுதந்திர இந்தியாவின் சிறந்த பிரதமர் யார்? என்ற கருத்துக் கணிப்பில், இந்தியாவின் சிறந்த பிரதமர் யார் என்ற கேள்வி மக்களிடம் கேட்கப்பட்டது.
 
இதில்,  44 சதவீதம் பேர் பிரதமர் மோடியை சிறந்த பிரதமராகத் தேர்வு செய்துள்ளனர். 
இவருக்கு அடுத்ததாக முன்னாள் பிரதமர் வாய்பாயை 15 சதவீதம் பேரும் தேர்வு செய்துள்ளனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை 14 சதவீதம் பேரும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை 11 சதவீதம் பேரும் ஆதரித்துள்ளனர்.
 
இதில், முன்னாள் பிரதமர்களான நேருவுக்கும், ராஜீவ் காந்திக்கும் மக்கள் ஆதரவளிக்கவில்லை. 
குறிப்பாக பிரதமர் மோடியை, சர்ஜிக்கல் ஸ்டிரைக்,  370 வது சட்டப்பிரிவு நீக்கம், கோரிய கால பணி ஆகியவற்றிக்காக  மக்கள் ஆதரவளித்துள்ளதாக இக்கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்