நம்பிக்கையில்லா தீர்மானம் என்ன ஆச்சு? இன்று நாடாளுமன்றத்தில் என்ன நடக்கும்?

திங்கள், 31 ஜூலை 2023 (09:24 IST)
நாடாளுமன்றத்தில் பாஜக ஆட்சிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்த நிலையில் இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் மணிப்பூர் கலவரத்தை முன்வைத்து எதிர்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மணிப்பூர் விவகாரத்தை பேச மறுக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளன.

அதை ஏற்றுக் கொண்டுள்ள சபாநாயகர் ஓம் பிர்லா அதுகுறித்த விவாதம் நடைபெறும் என கூறியிருந்தார். இதற்கிடையே எதிர்கட்சி தலைவர்கள் நேரடியாக மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து பேசியுள்ளனர். இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் மீண்டும் தொடங்குகிறது.

இன்றைய கூட்டத்தில் எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை மேற்கொள்ள வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமளியில் ஈடுபட்டால் அவை முடங்கும் வாய்ப்புகளும் உள்ளது. இதனால் இன்றைய நாடாளுமன்ற கூட்டம் எதிர்பார்ப்பில் உள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்