மேற்குவங்க ரயில் விபத்து நடந்தது எதனால்? விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

ஞாயிறு, 25 ஜூன் 2023 (14:21 IST)
இன்று காலை மேற்கு வங்காளத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 11 பெட்டிகள் தடம் புரண்டதாகவும் சரக்கு ரயில் டிரைவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான செய்தியை பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது இந்த ரயில் விபத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒண்டாகிராம் என்ற ரயில் நிலையத்தில் பராமரிப்புக்காக சரக்கு ரயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. 
இந்த நிலையில் எதிரே வந்த சரக்கு ரயில் சிவப்பு சிக்னலை மீறி பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதாகவும் இதில் 11 பெட்டிகள் தடம் புரண்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
சிக்னலை மீறி வந்த ரயில் டிரைவரிடம் விசாரணை நடத்தவும் தென்கிழக்கு ரயில்வே திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தொடர்ந்து மேலும் விசாரணை நடந்து வருவதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்