தாலி கட்டியதும் மணமகனிடம் காதலுடன் ஓடப்போவதாக கூறிய மணமகள்

செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (10:59 IST)
கேரள மாநிலத்தில் திருமணம் முடிந்த கையோடு மணமகள் காதலுடன் ஓடப் போவதாக மணமகனிடம் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 

 
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கொடுங்கல்லூரை சேர்ந்த ஷிஜில் என்பவருக்கும், மாயா என்பவருக்கு குருவாயூர் கோயிலில் திருமணம் நடைப்பெற்றது. திருமணம் முடிந்து அனைவரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்துள்ளனர். அப்போது மணமகள் மணமகனிடம் தூரத்தில் உள்ள ஒரு வாலிபரை காண்பித்து அவர்தான் தனது காதலர் என்றும் அவருடன் செல்லப் போவதாகவும் கூறியுள்ளார்.
 
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகன் இதை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களை விலக்கி விட்டுள்ளனர். 
 
மணமகன் வீட்டார் திருமணத்திற்கான செலவு ரூ.15 லட்சத்தை மணமகள் வீட்டாரிடம் திருப்பி தருமாறு கூற, ஒரு மாதத்தில் ரூ.8 லட்சம் தருவதாக மணமகள் வீட்டார் தெரிவித்துள்ளனர். பின்னர் இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்