பாஜகவின் சவாகசமே வேண்டாம் - தெறித்து ஓடும் தேவகவுடா

செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (11:06 IST)
கர்நாடகத்தில் ஜனதாதளம் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என ஜனதா தள கட்சி தேசிய தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ஒய்.எஸ்.வி.தத்தாவின் மனைவியின் நினைவு நாளில் கலந்துகொள்வதற்காக சென்ற தேவகவுடா செய்தியாளர்களிடம் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேட்டியளித்தார்.
 
அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்படி இருக்கும் வேளையில் மெஜாரிட்டி இல்லாத பகுதிகளில் காங்கிரஸ்-ஜனதா தள கட்சிகள் கூட்டணி அமைக்கும். வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி வைப்போம் ஆனால் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என தேவகவுடா தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்